×

கரீனா கபூர் மீது போலீசில் புகார்

மும்பை: மும்பையின் பீட் பகுதியில் உள்ள ஆல்பா ஒமேகா கிறிஸ்தவ மகாசங்கத்தின் தலைவர் அஷிஷ் ஷின்டே, சிவாஜி நகர் காவல் நிலையத்தில் பிரபல நடிகை கரீனா கபூர் மீது அளித்த புகாரில், ‘நடிகை கரீனா கபூர் மற்றும் அதிதி ஷா பீம்ஜானி ஆகியோர் இணைந்து எழுதியுள்ள புத்தகத்துக்கு ‘பிரக்னன்சி பைபிள்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இது மத உணர்வை புண்படுத்துவதாக உள்ளது. இதனால் நடிகை, பதிப்பகத்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ‘ என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், எப்ஐஆர் பதிவு செய்யவில்லை. சம்பவம் நடந்த இடம் மும்பை என்பதால் அங்கு சென்று புகார் தருமாறு அறிவுறுத்தியுள்ளனர்.


Tags : Kareena Kapoor , Kareena Kapoor, Police, Complaint
× RELATED மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸில்...