மழைக்கால தொடர் வரும் 18ல் அனைத்துக்கட்சி கூட்டம்

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 19ம் தேதி கூடுகிறது. இத்தொடர் ஆகஸ்ட் 13ம் தேதி வரை 19 நாட்கள் நடைபெறும். இந்நிலையில் மழைக்கால கூட்டத்ெதாடரை சுமூகமாக நடத்துவதற்கு அரசியல் கட்சிகள் ஆதரவை பெறும் வகையில் அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வருகிற 18ம் தேதி டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் பிரலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். பிரதமர்  மோடி தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் அனைத்து கட்சி  தலைவர்களும் பங்கேற்குமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Related Stories:

>