ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்:  ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தானை  சேர்ந்தவர் உட்பட 3 லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.  ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து புல்வாமா நகரில் வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.

வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட தீவிரவாதிகள் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. ஒருவர் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்த கமாண்டர் அஜிஸ் அபு ஹவுரியா என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

Related Stories:

>