×

பிஎஸ்டி கட்டுமான நிறுவனத்தால் 13 மாதத்தில் கட்டி முடிக்கப்பட்ட நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி

சென்னை: நாமக்கலில் புதிய மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்ட ரூ.338.78 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 37 ஏக்கர் பரப்பளவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டு வந்தது. நாமக்கல் பிஎஸ்டி கட்டுமான நிறுவனத்தின் சார்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பிஎஸ்டி கட்டுமான நிறுவனத்தின் தலைவர் தென்னரசு கூறுகையில், கல்லூரி வளாகத்தில் மருத்துவ கல்லூரி கட்டிடம், நிர்வாக கட்டிடம், கலையரங்கம், சிற்றுண்டியகம், உயர் மின் அழுத்த அறை, மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக தங்கும் விடுதிகள், முதல்வர், மருத்துவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் குடியிருப்பு, உள்ளிருப்பு மருத்துவர்கள் குடியிருப்பு, மாணவர்களுக்கு தேவையான ஆய்வகங்கள், வகுப்பறைகள், நூலகங்கள் என அனைத்து வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளது. வளாகத்திற்குள் சுற்றுச்சுவர், நுழைவாயில், தீ தடுப்பு அமைப்புகள், நாளொன்றுக்கு 10 லட்சம் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்கும் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவை கட்டுமான பணிகள் துவங்கப்பட்டு 13 மாதத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது, என்றார்.

Tags : Namakkal Government Medical College ,BST Construction Company , Namakkal Government Medical College completed by BST Construction Company in 13 months
× RELATED புதிய வளாகத்தில் கட்டப்பட்டுள்ள அரசு...