மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸ் புதிய ஷோரூம் திறப்பு

சென்னை: மலபார் குழுமத்தின் முன்னோடி நிறுவனமான மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் தனது 17வது புதிய ஷோரூமை சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் திறந்துள்ளது. அதிகமான இட வசதி, அதிகமான மாடல்கள், அதிகமான டிசைன்கள் ஆகியவை இந்த ஷோரூமில் இடம் பெற்றுள்ளன. இந்த புதிய ஷோரூமை மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸ் சேர்மன் எம்.பி.அகமது காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதில், இணை தலைவர் பி.ஏ.இப்ராஹிம் ஹாஜி, நிர்வாக இயக்குனர் ஒ.அசர், துணை தலைவர் அப்துல் சலாம், நிர்வாக இயக்குனர் சாம்லால் அகமது, தமிழ்நாடு மண்டல தலைவர் யாசர், இணை தலைவர் ராஜசேகரன், மேலாண்மை உறுப்பினர்கள் மற்றும் கிளை ஊழியர்கள் கலந்துகொண்டனர். இந்த ஷோரூமில் ஏராளமான தங்கம், வைரம், பிளாட்டினம், மற்றும் வெள்ளி, நகைகளின் தொகுப்புகள் உள்ளன. அணிந்தாலே ஜொலிக்கும் வைர நகைகளான ‘மைன்’, பிரம்மாண்டமான வடிவமைப்புகளை கொண்டுள்ள வெட்டாத வைரத்தால் செய்யப்பட்ட ‘எரா’, குழந்தைகளுக்கான நகை தொகுப்பான ‘ஸ்டார்லெட்’ ஆகியவை இடம்பெற்றுள்ளன.

Related Stories:

>