100வது பிறந்தநாள் சங்கரய்யாவுக்கு வைகோ வாழ்த்து

சென்னை: பொதுவுடமை புரட்சியாளர் என்.சங்கரய்யாவிற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: என். சங்கரய்யால் நூறாவது வயதில் அடியெடுத்து வைக்கின்றார். தன் வாழ்வையே போராட்டக் கள வேள்வியாக ஆக்கிக் கொண்டு எண்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பொது வாழ்வில் தடம் பதித்த ‘இரும்பு மனிதர்’ தோழர் சங்கரய்யா அவர்கள் நூற்றாண்டின் நுழைவாயிலில் இருப்பது நம்மை பெருமகிழ்ச்சி அடையச் செய்கிறது. தமிழ் இலக்கியங்களிலும் தோய்ந்து, சொற்பொழிவுகளில் அவற்றை வெளிப்படுத்தியவர். மூன்று முறை சட்டமன்றத்தில் இடம்பெற்று சிறப்பாக செயல்பட்டார். தோழர் என்.எஸ் இலட்சியப் பிடிப்பும் கொள்கை உறுதியும் பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள அனைவரும் குறிப்பாக இளைஞர்கள் பின்பற்ற வேண்டிய பண்பு நலன்கள் ஆகும். வாழும் பொதுவுடைமைப் புரட்சியாளர் தோழர் என். சங்கரய்யா அவர்கள் நூற்றாண்டு கடந்தும் நீண்ட ஆயுளுடன் பல்லாண்டுகள் வாழ்க என்று மதிமுக சார்பில் வாழ்த்துகிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>