இந்திய சீன படைகள் இடையே நடந்த மோதல் குறித்து விவாதிக்காததால் நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் இருந்து ராகுல்காந்தி வெளிநடப்பு

டெல்லி: நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் இருந்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளிநடப்பு செய்துள்ளார். டெல்லியில் இன்று நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டம் கூடியது. இதில் அனைத்து கட்சிகளின் முக்கிய எம்பி.க்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் டோக்லாம் எல்லையில் இந்திய சீன படைகள் இடையே நடந்த மோதல் குறித்து பேச வேண்டும் என்றும் அதுகுறித்து விவாதிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வலியுறுத்தினார்

ஆனால் அவரது கோரிக்கை ஏற்படாததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து டோக்லாம் எல்லையில் இந்திய சீன படைகள் இடையே நடந்த மோதல் குறித்து பேச விவாதிக்க வலியுறுத்தியும் அது ஏற்கப்படாததால் வெளிநடப்பு செய்ததாக ராகுல்காந்தி கூறி அந்த கூட்டத்தில் இருந்து வெளியேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து காங்கிரஸ் பிரமுகர்கள் ஆளும் பாஜக மீது கடுமையான விமர்சனங்களை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: