×

இந்தாண்டு கன்வர் யாத்திரை ரத்து: உத்தரகாண்ட் அரசு அறிவிப்பு

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ‘கன்வர் யாத்திரை’ நடைபெறும். இந்த யாத்திரையை மேற்கொள்ளும் சிவபக்தர்கள் ‘கன்வாரியாக்கள்’ என்று அழைக்கப்படுவர். யாத்திரையின் போது பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள், உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார், கவுமுக், கங்கோத்ரி உள்ளிட்ட புனித தலங்களுக்கு சென்று கங்கை நீரை எடுத்து செல்வார்கள். அந்த கங்கை நீரை, தங்கள் ஊர்களில் உள்ள சிவன் கோயில்களுக்கு கொண்டு சென்று, சிவலிங்கங்களுக்கு அபிஷேகம் செய்வார்கள். இந்த யாத்திரைக்கு பெயர் கன்வர் யாத்திரை என்று அழைக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்தாண்டு யாத்திரை குறித்து உத்தரகாண்ட் மாநில அரசு, ஆலோசனை நடத்தி வந்த நிலையில், அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி வெளியிட்ட அறிவிப்பின்படி, ‘கொரோனா 3வது அலை பரவல் அபாயம் மற்றும் டெல்டா பிளஸ் கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால் இந்தாண்டு கன்வர் யாத்திரை ரத்து செய்யப்படுகிறது. அருகில் உள்ள மாநிலங்களில் இருந்து காவல்துறை அனுமதியுடன் லாரிகளில் கங்கை நீரை எடுத்து செல்ல அனுமதி வழங்கப்படும்’ என தெரிவித்தார்.

Tags : Uttarakhand government ,Kanwar pilgrimage , Kanwar Pilgrimage, Cancellation, Government of Uttarakhand, Notice
× RELATED பொது சிவில் சட்டத்தில் தகாத...