ஓராண்டுக்கு பின்னர் நேரடியாக நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவை கூட்டம்!: புதிதாக பொறுப்பேற்ற 43 அமைச்சர்களும் பங்கேற்பு..!!

டெல்லி: ஓராண்டுக்கு பின்னர் முதல்முறையாக ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நேரடியாக நடைபெற்றது. கொரோனா காரணமாக கடந்த ஒரு ஆண்டுகளாக ஒன்றிய அமைச்சரவை கூட்டம் காணொலி வாயிலாகவே நடைபெற்றது. அமைச்சர்கள் அனைவரும் நேரடியாக பங்கேற்ற கூட்டமானது கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் வாரத்தில் நடைபெற்றது. தற்போது கொரோனா 2ம் அலையின் தாக்கம் குறைந்திருப்பதை அடுத்து அமைச்சர்கள் நேரடியாக பங்குபெற்ற கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தில் நடைபெற்றது.

அமைச்சரவை விரிவாக்கத்திற்கு பின்னர் நடைபெறும் இரண்டாவது கூட்டம் இதுவாகும். இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் குறித்து விவாதிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் பல முக்கிய பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்ப உள்ள நிலையில் அதனை சமாளிப்பது குறித்து அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் புதிதாக பொறுப்பேற்ற 43 அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர்.

Related Stories:

>