×

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டினால் காரைக்கால் விவசாயிகள் பாதிக்கப்படுவர்!: தமிழக அரசை தொடர்ந்து புதுவை அரசும் எதிர்ப்பு..!!

புதுச்சேரி: மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட புதுச்சேரி அரசும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. காவிரி நீரின் கடைமடை பகுதியாக புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் உள்ளது. காரைக்கால் பகுதியில் தற்போது 4,000 ஹெக்டரில் மட்டுமே விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். காரைக்காலில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளனர். தற்போது காவிரியில் இருந்து தண்ணீரின் அளவு குறைவான சூழலில் வந்து கொண்டிருக்கிறது. கர்நாடகா மாநில அரசு மேகதாது என்ற இடத்தில் அணைகள் கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

இந்த அணை கட்டப்பட்டால் புதுச்சேரி மாநிலம் காரைக்காலுக்கு கடைமடை வரை தண்ணீர் வருவது முற்றிலுமாக நின்றுவிடும். இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவர். தொடர்ந்து, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், காரைக்காலை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கான அமைச்சர் சந்திர பிரியங்கா, திருமுருகன், பி.ஆர். சிவா மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை காட்டினால் தமிழ்நாட்டுக்கான தண்ணீர் கிடைக்காது.

அதனால் புதுச்சேரிக்கும் காவிரி நீர் கிடைக்காத நிலை உருவாகும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில், மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட புதுச்சேரி அரசும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேகதாதுவில் அணை கட்டினால் காரைக்கால் விவசாயிகள் பாதிக்கப்படுவர் என்றும் புதுச்சேரி அரசு தெரிவித்திருக்கிறது. மேகதாது அணை கட்டக்கூடாது என்று வலியுறுத்தி பிரதமர், ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் கர்நாடக அரசு அணை கட்டுவதால் நாட்டின் தென் பகுதிகளிலுள்ள மற்ற மாநிலங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இதனால் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு தமிழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : Karaikal ,Cauvery ,Megha Dadu , Cauvery, Megha Dadu, Dam, Karaikal Farmers, New Government
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...