திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் நாய்கள் கடித்து மான் பலி

திருவண்ணாமலை :  திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் நாய்கள் கடித்து மான் பலியானது.திருவண்ணாமலை தீப மலையில் ஆயிரக்கணக்கான மான்கள் உள்ளன. மலையில் இருந்து  மான்கள் கூட்டம், கூட்டமாக மலையடிவார பகுதியில் நடமாடுவது வழக்கம். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக கிரிவலப் பாதையில் வாகன போக்குவரத்து முற்றிலுமாக தடையானது. எனவே, அமைதி சூழ்ந்த கிரிவலப் பாதையில் அடிக்கடி மான்கள் நடமாடுவது அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நேற்று மாலை கிரிவலப் பாதையை கடந்து சென்ற மானை அந்த பகுதியில் இருந்த நாய்கள் விரட்டி சென்று கடித்து குதறியது. இதனால், மான் பரிதாபமாக உயிரிழந்தது. தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து வந்து, பலியான மானை கைப்பற்றி வனப்பகுதியில் அடக்கம் செய்தனர்.

Related Stories:

>