×

உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

ஊட்டி : உங்கள் ெதாகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. உங்கள் தொகுதியில் மு.க.ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்தில் ஊராட்சிகளில் பணியாற்றும் முன்களப் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பு உபகரணங்கள் வழங்குதல், பசுமை வீடுகள் வழங்குதல் உட்பட பல்வேறு திட்டங்களின் கீழ் 158 பயனாளிகளுக்கு ரூ.76 லட்சத்து 75 ஆயிரத்து 900 மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங்கும் விழா ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடந்தது.

விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா வரவேற்றார். உதவி கலெக்டர்கள் ேமானிகா ராணா, தீபனா விஷ்வேஷ்வரி மற்றும் மாவட்ட ஊராட்சி தலைவர் ெபான்ேதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்து பேசியதாவது:  தேர்தல் பரப்புைரயின் ேபாது பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக தமிழக முதல்வர் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற துறையை உருவாக்கியுள்ளார். இந்த துறையில் பெறப்பட்ட மனுக்கள் மீது தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்ைத நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையில் ஒருகிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மனுவும், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 885 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில், 764 மனுக்களுக்கு இதுவரை தீர்வு காணப்பட்டுள்ளது. 1223 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 768 வீடுகள் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்டு வருகிறது. வீடுகள் கேட்கப்பட்டுள்ளவர்களுக்கு விருப்பம் இருந்தால், அந்த வீடுகள் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், வேலை வாய்ப்பு கேட்டு பல மனுக்கள் வந்துள்ளன. பலர் சாலை வசதி கேட்டுள்ளனர்.

இதற்கு நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு சாலைகள் சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், இத்திட்டத்தின் கீழ் 158 பயனாளிகளுக்கு ரூ.76 லட்சத்து 75 ஆயிரத்து 900 மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. ரூ.3 கோடியே 49 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பிலான 51 திட்டப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா ெதாற்றின் போது, முன்கள பணியாளர்கள் பலர் பணியாற்றியுள்ளனர். அவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது, என்றார்.
 விழாவில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:

 முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்கள் மீது அக்கறை கொண்டவராக உள்ளார். கொரோனா ஒழிப்பு பணியில் சிறப்பாக செயலாற்றி வருகிறார். ஆட்சி பொறுப்பேற்றவுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கையிலும், மருந்துகள் கிடைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டார். தொடர்ந்து, ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்ட போது, அதனை சமாளித்து அனைத்து மருத்துவமனைகளிலும் தேவையான அளவு ஆக்சிஜன் கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொண்டார்.

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கொரோனா தொற்று வேகம் எடுத்தது. அதனை கட்டுப்படுத்தவும், ஆக்சிஜன் போதுமான அளவு கிடைத்திட தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்தார். நீலகிரி மாவட்டத்தில் 421 படுக்கைகள் உள்ளன. இதில், 300க்கும் மேற்பட்ட படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது அலை ஓய்ந்த நிலையில், மூன்றாவது அலைக்கு ேதவையான ஆக்சிஜன் உள்ளது.

கொரோனா தடுப்பு பணியில் முன்கள பணியாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். தேர்தலுக்கு முன் பரப்புரையின் போது, தமிழக முதல்வர் ஸ்டாலின் குறைகளை கேட்டறிந்தார். பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களை பெற்று அதற்கென ஒரு துறையை உருவாக்கி பொதுமக்களின் குறைகளை களைந்து வருகிறார். என்றார்.  இவ்விழாவில் அரசு ஊழியர்கள் மற்றும் பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.



Tags : Ooty: Welfare assistance has been provided to various beneficiaries in the Nilgiris district under the Chief Minister's scheme in your constituency. Your
× RELATED திருத்தப்பட்ட ஆண்டு திட்ட அட்டவணையை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி.