×

கொரோனா 3வது அலை குறித்த எச்சரிக்கையை வானிலை அறிக்கை போல கருத வேண்டாம் : டாக்டர் .வி.கே.பால் அறிவுறுத்தல்

டெல்லி : கொரோனா 3வது அலை குறித்த எச்சரிக்கையை வானிலை அறிக்கை போல கருத வேண்டாம் என்று கொரோனா தடுப்புப் பிரிவின் தலைவரும் நிதி ஆயோக் உறுப்பினருமான டாக்டர் .வி.கே.பால் தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் பொதுமக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கிறது. இதனால் கொரோனா வழிமுறைகளை பின்பற்றாமல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள்  பெரும் திரளாகக் கூடுவதும் சுற்றுலா செல்வதும் 3வது அலை தொடக்கத்துக்கும் காரணமாக இருக்குமோ என்ற அச்சம் பரவலாக எழுகிறது.


இந்த நிலையில், ஜூலை 4ம் தேதியே கொரோனா 3வது அலை சில மாநிலங்களில் பரவ தொடங்கிவிட்டதாக  ஹைதராபாத் பல்கலைக்கழக பேராசிரியர் விபின் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். கடந்த 463 நாட்களாக இந்தியாவில் கொரோனா பரவல் குறித்த தரவுகளை ஆய்வு செய்ததில் இது தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே கொரோனா 3வது அலை குறித்த எச்சரிக்கையை வானிலை அறிக்கை போல கருத வேண்டாம் என்று கொரோனா தடுப்புப் பிரிவின் தலைவரும் நிதி ஆயோக் உறுப்பினருமான டாக்டர் .வி.கே.பால் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உலகின் சில நாடுகளில் கொரோனா 3வது அலை வேகம் எடுத்து வருகிறது.

இது இந்தியாவுக்குள் பரவாமல் இருக்க மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.நமது பொறுப்பற்ற செயல்களால் தான் 3வது அலை உருவாகி பரவும். அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு கொரோனா 3வது அலையை இந்தியாவில் தாக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்,என்றும் டாக்டர் வி.கே.பால் சுட்டிக் காட்டியுள்ளார்.  



Tags : Dr. ,VK Paul , டாக்டர் வி.கே.பால்
× RELATED கண்ணைக் கட்டிக்கொள்ளாதே