×

தெலுங்கானாவில் பரபரப்பு!: வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்ய முயன்ற பழங்குடியின மக்கள் கைது..!!

தெலுங்கானா: தெலுங்கானா மாநிலத்தில் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்ய முயன்ற பழங்குடியின மக்களை போலீசார் கைது செய்தனர். தெலுங்கானா மாநிலத்தின் மடகுடெமில் என்ற கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்கள் மலையை ஒட்டியிருக்கும் நிலத்தில் பயிரிட உழவு செய்து வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற வனத்துறை அதிகாரிகள் இந்த நிலம் வனத்துறைக்கு சொந்தமானது என்று கூறி உழவு பணியை தடுக்க முற்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பழங்குடியின மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.

இந்த நிலத்தையும் அபகரித்துவிட்டால் தாங்கள் எங்கு செல்வோம் என கடுமையாக வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, ஆயுதம் வைத்திருந்த வனத்துறை அதிகாரிகளையும் பழங்குடியின மக்கள் விரட்டியதால் பதற்றம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தாக்குதல் நடத்த முயன்ற பழங்குடியின மக்களை வனத்துறை அதிகாரிகள் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Tags : Telangana , Telangana, Forest Department, Agriculture, Indigenous People, Arrested
× RELATED காதலனை திருமணம் செய்து கொண்டதால்...