×

தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியாக பாஜக உருவெடுக்கும்: அண்ணாமலை பேட்டி

கோவை: தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியாக பாஜக உருவெடுக்கும் என தமிழக புதிய பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 2024 பாராளுமன்றத்தில் தமிழ்நாடு பாஜக எம்.பிக்கள் பலர் இடம்பெற்றிருப்பார்கள். இது ஆரம்பம் மட்டும்தான்; கடுமையாக உழைப்போம்; கட்சியைக் வளர்ப்போம். வயது முக்கியமில்லை; மூத்த, இளம் தலைவர்கள் என அனைவரையும் அரவணைத்து செல்வேன். காவிரி, மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கு பாஜக முழு ஒத்துழைப்பு தரும். கொங்குநாடு தொடர்பாக நாளை மறுநாள் விளக்கம் தருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags : Tamil Nadu , BJP to emerge as largest party in Tamil Nadu: Annamalai interview
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...