×

எடப்பாடி அருகே முன்னாள் முதலமைச்சர் பெயரில் நள்ளிரவில் தொடரும் மணல் திருட்டு!: துணிச்சலுடன் வாகனத்தை சிறைபிடித்த கிராம மக்கள்..!!

சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே நள்ளிரவில் மணல் திருட்டில் ஈடுபட்ட வாகனங்களை கிராம மக்கள் சிறைபிடித்தார்கள். எடப்பாடி அருகே வேப்பம்பட்டி பகுதியில் சுமார் 560 ஏக்கர் பரப்பளவில் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் மணல் அல்ல எந்த அனுமதியும் அளிக்கப்படாத நிலையில் இரவு நேரங்களில் மணல் திருட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்றிரவு மணல் அள்ளி செல்ல முயன்ற வாகனங்களை கிராம மக்கள் துணிச்சலுடன் சிறைபிடித்தார்கள்.

அப்போது வாகனங்களை விட்டுவிட்டு கடத்தல்காரர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். மணல் திருட்டு குறித்து பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறும் கிராம மக்கள், முன்னாள் முதலமைச்சர் பெயரை கூறி இந்த திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாக குற்றம்சாட்டியுள்ளார்கள். மணல் திருட்டை தடுத்து நிறுத்தி ஏரியின் இயற்கை வளம் அழியாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேப்பம்பட்டி கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


Tags : Chief Minister ,Edipadi , Edappadi, sand theft, vehicle, captivity
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...