×

முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகிறார்: நடிகர் விஜய் சேதுபதி பாராட்டு

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகிறார் என்று, நடிகர் விஜய் சேதுபதி பாராட்டு தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி, கடந்த மே 7ம் தேதி பதவி ஏற்றுக்கொண்டது. 65 நாட்கள் கடந்த நிலையில், பல்வேறு தரப்பினர் தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் பெங்களூரு அடுத்த பிடதியில் நடந்த மாஸ்டர் செப் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஜய் சேதுபதி பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், தமிழக அரசின் செயல்பாடு குறித்து ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு விஜய் சேதுபதி பதில் அளிக்கையில், ‘தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரொம்ப சிறப்பாக பணியாற்றி வருகிறார். எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. நான் முதல்வரை நேரில் சந்தித்து, உங்களின் ஆட்சி ரொம்ப சிறப்பாக இருக்கிறது சார் என்று சொன்னேன். அது மட்டுமின்றி, என்னை சுற்றியிருப்பவர்கள், நண்பர்கள், மக்கள், எனது டிரைவர், என் உதவியாளர்கள் அனைவரிடமும் இந்த ஆட்சியை எப்படிப் பார்க்கிறீர்கள் என்று கேட்டேன். இதுவரை என்னை சுற்றி இருக்கும் யாருமே குறை சொல்லவில்லை’ என்றார்.

Tags : Chief Minister ,MK Stalin ,Vijay Sethupathi , Chief Minister, MK Stalin, actor Vijay Sethupathi
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...