கல்விக்கு தனி வானொலி: கமல்

சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஆன்லைன் வகுப்புகளின் விளைவுகளை எல்லா குடும்பங்களும் எதிர்கொள்கின்றன. இதற்கு வானொலி சிறந்த மாற்றாக இருக்க முடியும்.கல்வி தொலைக்காட்சி போல், தமிழக அரசு கல்விக்காக தனி வானொலி அல்லது பண்பலை வரிசை தொடங்க வேண்டும். தனி முழுநேர வானொலி உருவாக்கப்படுமானால், ஏழை எளிய மாணவர்களுக்கு மிகப்பெரிய வசதியாக இருக்கும். இதர மாணவர்களுக்கும் தங்களது ஸ்கிரீன் நேரத்தை குறைத்துக்கொள்ள உதவும். தமிழக அரசு இதை பரிசீலிக்க வேண்டுகிறேன்.

Related Stories:

>