தமிழக பாஜ தலைவராக அண்ணாமலை 16ம் தேதி பொறுப்பு

சென்னை: தமிழக பாஜ தலைவராக இருந்த எல்.முருகன், ஒன்றிய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து புதிய தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை கடந்த 8ம் தேதி அறிவிக்கப்பட்டார். தொடர்ந்து அவர் டெல்லியில் பாஜ மூத்த தலைவர்களை சந்தித்து வாழ்த்து ெபற்றார். இந்த நிலையில் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலை வருகிற 16ம் தேதி பிற்பகல் 2 மணியளவில் சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் பொறுப்பேற்கிறார். இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி, தேசிய இணை பொறுப்பாளர் டாக்டர் சுதாகர் ரெட்டி, முன்னாள் மாநில தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் மாநில தலைவரை தலைவர் இருக்கையில் அமரச் செய்து பொறுப்பேற்க செய்கின்றனர்.

முன்னதாக இன்று கோவையில் தொடங்கி சென்னை வரை சாலை மார்க்கமாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.  பல்லாவரம், ஆலந்தூர்(கோர்ட் அருகே), சைதாப்பேட்டை வழியாக கமலாலயம் வருகிறார். மாநில தலைவருக்கு வரவேற்பு அளிக்கும் வகையில் பாஜ சார்பில் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய இணையமைச்சர் வருகை

ஒன்றிய இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள எல்.முருகன், முதல் முறையாக வருகிற 16ம் தேதி காலை சென்னை வருகிறார். தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் அவருக்கு நிர்வாகிகள், தொண்டர்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து அவர் மாநில தலைவர் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.

Related Stories:

>