×

2 ஆண்டுகளுக்கு பின் ஒரே நேர்கோட்டில் செவ்வாய், வெள்ளி: கொடைக்கானலில் அரிய நிகழ்வை கண்டுகளித்த பொதுமக்கள்

கொடைக்கானல்: இரண்டு ஆண்டுகளுக்கு பின் வானில் செவ்வாய், வெள்ளி கோள்கள் ஒரே நேர்கோட்டில் வந்த அரிய நிகழ்வை கொடைக்கானலில் பொதுமக்கள் தொலைநோக்கி மூலம் கண்டுகளித்தனர். வானில் சூரியனை, பூமியை போல் பல கோள்கள் சுற்றி வருகின்றன. இதில் பூமிக்கு அருகில் உள்ள செவ்வாய்க்கோளும், வெள்ளிக்கோளும் ஒன்றை ஒன்று நெருங்கி வரும் அரிய நிகழ்வு கொடைக்கானலில் நேற்று முன்தினம் வானில் தெளிவாக தென்பட்டது. இந்த 2 கோள்களுக்கும் இடையே வானில் 0.5 டிகிரி இடைவெளிதான் இருக்கும். மேலும் செவ்வாய், வெள்ளி கோள்களுக்கு சுமார் 4 டிகிரி தொலைவில் பிறை சந்திரன் தென்பட்டது. இதனை கொடைக்கான‌ல் பொதும‌க்க‌ள் தொலைநோக்கிக‌ள் மூல‌ம்  கண்டுகளித்தனர்.

தொடர்ந்து இதுபோல கோள்கள் ஒன்றையொன்று நெருங்கும் காட்சியை தொலைநோக்கி போன்று எந்தவித கருவிகளும் இல்லாமல் வெறும் கண்களால் காண முடியும். இதனால் எந்தவித ஆபத்தும் இல்லை எனவும் கொடைக்கானல் இந்திய வானியற்பியல்  விஞ்ஞானிகள் தெரிவித்தனர். கொடைக்கானல் வானியல் விஞ்ஞானி டாக்டர் எபினேசர் கூறுகையில், ‘‘செவ்வாய், வெள்ளி கோள்கள் ஒரே நேர்கோட்டில் இணையும் இந்த அரிய நிகழ்வு முன்பு கடந்த 2019, ஆக. 24ம் தேதி வானில் தென்பட்டது. அதன்பின் 2 ஆண்டுகள் கழித்து தற்போது இந்நிகழ்வு நடந்துள்ளது. இதேபோல் அடுத்த நிகழ்வு 2024ம் ஆண்டு பிப். 22ல் தோன்றும்’’ என்றார்.


Tags : Kodaikanal , 2 years later in a straight line Tuesday, Friday: The public witnessed the rare event in Kodaikanal
× RELATED கொடைக்கானலில் வறண்ட முகம் காட்டும்...