×

சீனாவில் ஓட்டல் இடிந்து 8 பேர் பலி

பீஜிங்: கிழக்கு சீனாவின் சுசோ நகரில் சிஜி கையூன் என்ற பெயரில் ஓட்டல் இயங்கி வந்தது. கடந்த 2018ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஓட்டலில் 54 அறைகள் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் பிற்பகல் திடீரென கட்டிடம் இடிந்து விழுந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஓட்டலில் வேலை செய்துகொண்டிருந்த பணியாளர்கள் அறைகளில் தங்கியிருந்த விருந்தினர்கள் என 23 பேர் இடிபாடுகளில் சிக்கினார்கள். தகவலின்பேரில் அங்கு மீட்பு குழுவினர் விரைந்தனர். நிலநடுக்க மீட்பு குழுவினர், தீயணைப்பு துறையினர் என சுமார் 600 பேர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 120 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதுவரை 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 8 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. 9 பேரை காணவில்லை. தொடர்ந்து மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Tags : China , Hotel crash kills 8 in China
× RELATED சொல்லிட்டாங்க…