×

நாடாளுமன்றம் முன்பாக தொடர் போராட்டம்: விவசாயிகள் அறிவிப்பு

புதுடெல்லி: புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக வரும் 22ம் தேதி நாடாளுமன்றம் முன்பாக போராட்டம் நடத்தப் போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 8 மாதங்களாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒன்றிய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே நடைபெற்ற பலசுற்று பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில், அடுத்தக் கட்டப் போராட்டத்திற்கான அறிவிப்பை விவசாய சங்கங்கள் வெளியிட்டுள்ளன. பாரதிய கிசான் சங்கத் தலைவர் ராகேஷ் திகைத் நேற்று அளித்த பேட்டியில், ‘‘விவசாயிகள் போராட்டம் தொடரும். வரும் 22ம் தேதி டெல்லிக்குச் சென்று நாடாளுமன்றத்திற்கு முன்பாக அமர்ந்து போராட்டம் நடத்துவோம் . தினமும் 200 பேர் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்’’ என்றார்.

Tags : Parliament , Series of protests before Parliament: Farmers' announcement
× RELATED மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில்...