அதிமுக பிரமுகர் மனைவியிடம் நகை பறிப்பு

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே களியாம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் தங்கபஞ்சாட்சரம் (64). அதிமுக மத்திய ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவரது மனைவி தெய்வநாயகி (59). இவர்களது வீட்டின் அருகே, புதிதாக வீடு கட்டியுள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தெய்வநாயகி புதிதாக கட்டிய  வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு சுமார் 1 மணியளவில், மர்மநபர்கள் 2 பேர், தங்கபஞ்சாட்சரம் வீட்டின் வெளி கதவை  உடைத்து உள்ளே சென்றனர். அங்கு தூங்கி கொண்டிருந்த தெய்வநாயகியின் கழுத்தில் இருந்த 12 சவரன் தங்க நகையை அறுத்தனர். இதில் திடுக்கிட்டு எழுந்த அவர், அலறி கூச்சலிட்டார். உடனே, மர்மநபர்கள் தப்பிவிட்டனர். புகாரின்படி பெருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories:

>