×

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு

டெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் சந்தித்துள்ளார். ராகுல் காந்தியுடன் பிரசாந்த் கிஷோரின் ஆலோசனையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் பங்கேற்றுள்ளார். அண்மையில் சரத் பவார், மம்தா பானர்ஜி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களை பிரசாந்த் கிஷோர் சந்தித்தார். பிரசாந்த் கிஷோர் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கை கடந்த வாரத்தில் சந்தித்து பேசினார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்கு ஆலோசகராக செயல்பட்டார்.

எதிர்கட்சிகளை பாரதிய ஜனதாவுக்கு எதிராக பிரசாந்த் கிஷோர் ஒருங்கிணைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இவர் முன்பு பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆலோசகராக இருந்து அவர் வெற்றி பெற்றது மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு ஆலோசகராக இருந்து நிதிஷ் குமார் வெற்றி பெற்றது போன்ற பல்வேறு விசயங்களை அரசியல் தலைவர்கள் நினைவு கூறுகிறார்கள். ஆகவே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் ஆலோசகராக இருக்கும் பிரசாந்த் கிஷோர் அடுத்த வருடம் உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல்கள் வர இருக்கின்றன. அந்த சமயத்தில் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக செயல்படுவாரா, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகளை ஒருங்கிணைத்து பாரதிய ஜனதாவுக்கு எதிராக ஒரு அணியை உருவாக்குவாரா அந்த அணியிலே சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ்வாதி கட்சி போன்றவை இடம்பெற வாய்ப்பு இருக்கிறதா போன்றவை மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றன.

ஆகவே இன்று ராகுல் காந்தியுடன் பிரசாந்த் கிஷோர் நடத்திய ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அத்துடன் பிரியங்கா காந்தி இந்த வாரம் லக்னோ செல்ல இருக்கிறார். அங்கே உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தல் பணிகளை தொடங்க இருக்கிறார். பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் நவ்ஜோத்சிங் சித்து இடையே மோதல் நடைபெற்று வருகிறது. அதிலும் பிரசாந்த் கிஷோருக்கு பங்கு இருக்கிறது. அமரீந்தர் சிங் ஏற்கனவே பிரசாந்த் கிஷோரை ஆலோசகராக நியமித்துள்ளார். முக்கியமான முடிவுகளுக்கு இந்த சந்திப்பு ஒரு தொடக்க புள்ளியாக இருக்கக்கூடும் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

Tags : Prasant Kishor ,Rahul Gandhi ,Congress , prashant kishor
× RELATED நாடு முக்கியமான கட்டத்தில் உள்ளது;...