டெல்டா வகை கொரோனா 104 நாடுகளுக்கு பரவிவிட்டதாக WHO தகவல்.. அதிகளவில் பாதிப்பு, உயிரிழப்புகளை ஏற்படுத்துவதாக எச்சரிக்கை!!

ஜெனீவா : இந்தியாவில் உருவான டெல்டா வகை கொரோனா வைரஸ் 104 நாடுகளுக்கு பரவிவிட்டதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் எச்சரித்துள்ளார்.உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக பல கோடி மக்களை தாக்கி வரும் நிலையில் பல்வேறு நாடுகளில் கொரோனா வெவ்வேறு வகையில் உருமாற்றம் அடைந்துள்ளது. அவற்றை ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என பெயரிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி, உலகளவில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்களின் இந்தியாவில்  உருவான டெல்டா வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டது.

இந்த வைரஸ் இதுவரை 104 நாடுகளில் பரவி இருப்பதாக தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதோனம், அண்மை காலமாக உயிரிழப்புகள் அதிகரிக்க இவவகை வைரஸ் தான் காரணம் என கூறியுள்ளார்.விரைவில் உலகம் முழுவதும் தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸாக டெல்டா வகை கொரோனா இருக்கும் என கனிந்துள்ள அவர், கொரோனா பெருந்தொற்று இன்னும் முடியவில்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>