×

கேரள பெண் பலாத்கார புகாரின் பின்னணியில் பணம் பறிக்கும் கும்பல் உள்ளதா என போலீஸ் விசாரணை

திண்டுக்கல்: பழனியில் கேரள பெண் கூட்டுப்பலாத்காரம் செய்யப்பட்டதாக எழுந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பழனி மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். கேரள பெண் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டதன் பின்னணியில் பணம் பறிக்கும் கும்பல் உள்ளதா என போலீஸ் விசாரணை நடத்துகின்றனர். கேரள போலீசில் தர்மராஜ் என்பவர் அளித்துள்ள புகாரில் குறிப்பிட்டுள்ள இடங்களில் பழனி போலீஸ் ஆய்வு நடத்துகின்றனர். சம்பவம் நடந்ததாக கூறப்படும் இடத்தின் சிசிடிவி காட்சிகளில் இருவரும் நடமாடியதற்கான ஆதாரங்கள் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. பழனியில் வேறு இடங்களில் இருவரும் சுற்றி வந்ததுடன் மதுபானம் வாங்கியதற்கான சிசிடிவி ஆதாரமும் கிடைத்துள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர். கேரள பெண்ணும் போலீசில் புகார் அளித்த தர்மராஜும் தாய் - மகன் என்று கூறி அறை வாடகை எடுத்ததாக விடுதி உரிமையாளர் முத்து தகவல் அளித்துள்ளார். தங்கும் விடுதியில் குடிபோதையில் தகராறு செய்ததால் இருவரையும் வெளியேற்றியதாக விடுதி உரிமையாளர் விளக்கம் அளித்துள்ளார்.

போலீசார் விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண்ணும் அவருடன் வந்த நபரும் கணவன் - மனைவி இல்லை என தெரிய வந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் பழனியில் கூறப்பட்டுள்ளதாக நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணை பரிசோதனை செய்த கேரளா மருத்துவர்கள் மருத்துவ அறிக்கை ஒன்றை வெயிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் கூட்டுப்பலாத்காரம் செய்ததற்கான தடயங்கள் ஏதும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கில் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட பெண், அவருடன் வந்தவர்கள் சில நாட்களுக்கு முன்பு தங்கும் விடுதி உரிமையாளரை தொலைபேசியில் அழைத்து பணம் கேட்டு மிரட்டியதாகவும் தற்போது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பழனியில் கேரள பெண் கூட்டுப்பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது -பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெண் ஒருவருக்கு தமிழகத்தில் பாதுகாப்பற்ற நிலை இருப்பதாக பலரும் விமர்சனம் செய்துவந்த நிலையில் இது பொய்யான குற்றச்சாட்டு என்பதை போலீசார் உறுதிபடுத்தி வருகின்றனர். மேலும் இதுதொடர்பான விசாரணையை நடத்துவதற்காக திண்டுக்கல் டிஎஸ்பி சந்திரன் தலைமையிலான தனிப்படை போலீசார் கேரளாவிற்கு சென்றுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் மற்றும் இந்த விவகாரத்தில் புகார் அளித்த தர்மராஜ் என்ற நபரிடமும் விசாரணை நடத்த உள்ளனர்.

Tags : Kerala , kerala, women, palani
× RELATED தமிழக – கேரள எல்லையோர கிராமங்களில்...