×

செங்குன்றம் அருகே பயங்கரம்; புடவையால் கழுத்து நெரித்து கள்ளக்காதலி கொடூர கொலை: கள்ளக்காதலன் தப்பியோட்டம்

புழல்: புடவையால் கழுத்தை நெரித்து கள்ளக்காதலியை கொலை செய்து தப்பிவிட்ட கள்ளக்காதலனை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை செங்குன்றம் காந்தி நகர், கலைஞர் தெருவை சேர்ந்தவர் நாராயணன் (40). இவர் கட்டிட தொழிலாளி. இவரின் மனைவி மோகனா (36). 2 மகன்கள் உள்ளனர். இதே பகுதியை சேர்ந்த செக்யூரிட்டி தாஸ் என்பவருக்கும் மோகனாவுக்கும் கள்ளக்காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று மாலை மோகனா சமையல் செய்துகொண்டிருந்தபோது தாசுக்கும் மோகனாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் கோபம் அடைந்த தாஸ், வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு வேகமாக வெளியே சென்றுவிட்டார். அவர் ஆக்ரோஷத்துடன் செல்வதை பார்த்ததும் அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பொதுமக்கள் கொடுத்த தகவல்படி, சோழவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்தனர். பின்னர் கதவை உடைத்து பார்த்தபோது புடவையால் கழுத்தை நெரித்து மோகனா கொல்லப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது சடலத்தை கைப்பற்றி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாசை தேடி தேடி வருகின்றனர்….

The post செங்குன்றம் அருகே பயங்கரம்; புடவையால் கழுத்து நெரித்து கள்ளக்காதலி கொடூர கொலை: கள்ளக்காதலன் தப்பியோட்டம் appeared first on Dinakaran.

Tags : Chenkulandam ,Sarey ,Khalkadadalan ,Chennai ,Chenkunnam Gandhi ,Cobber ,
× RELATED அக்காவை ஜெயில்ல தள்ளுங்க சாரே...வாண்டு செய்த வில்லங்கம்