நெல்லை - திருச்செந்தூர் சாலையோரங்களில் மெகா மரத்தடிகள்

நெல்லை :  நெல்லை- திருச்செந்தூர் சாலை விரிவாக்கப் பணிக்காக வெட்டப்பட்ட மரத்தடிகள் சாலையோரங்களில் ஆங்காங்கே அகற்றப்படாமல் உள்ளன. விபத்து அபாயம் உள்ளதால் இவற்றை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.நெல்லையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் பல்வேறு இடங்களில் அபாயகர வளைவுகள் உள்ளன. சிறிய மற்றும் குறுகிய பாலங்களும் உள்ளன. இதன் காரணமாக நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு பயணிக்க அதிகபட்சம் 2 மணிநேரம் வரை ஆகிறது.

மேலும் திருச்செந்தூர் ேகாயிலுக்கு பாதயாத்திரை பக்தர்கள் செல்லும் போது அதிக வாகன நெரிசல் இச்சாலையில் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் நீண்ட காலமாக இருந்து வந்தது. எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், தற்போது இந்த சாலை விரிவாக்கப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஒருபுறம் நில ஆர்ஜித பணிகள் தொடர்கின்றன. நில ஆர்ஜிதம் முடிந்த பகுதிகளில் சாலை விரிவாக்கத்திற்கான ஆரம்பகட்டப் பணிகள் நடந்து  வருகிறது.

இதற்காக சாலையோரங்களில் சிறிய மற்றும் பெரிய மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு வருகின்றன. பாளை.- திருச்செந்தூர் சாலையில் செய்துங்கநல்லூர், கருங்குளம் போன்ற பகுதிகளில் வெட்டப்பட்ட மரத்தடிகள். அகற்றப்படாமல் கிடக்கின்றன. பல இடங்களில் சாலையோரம் கிடக்கும் இந்த தடிகளால் விபத்து அபாயம் நிலவுகிறது. எனவே இவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories:

More
>