×

வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்-பெரம்பலூர் கலெக்டரிடம் கண்ணீர் மல்க பெண் மனு

பெரம்பலூர் : வெளிநாட்டில் இறந்த கணவனின் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் இளம்பெண் கண்ணீர் மல்க மனு கொடுத்தார்.பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுக்கா, பெண்ணக்கோணம் கிராமம், காலனி தெருவைச் சேர்ந்தவர் இள வரசன் மகன் ராஜ்குமார் (26). இவருடைய மனைவி கவுசல்யா(21). இவர்களுக்கு ஒன்றரை வயதில் மகள் உள்ளார்.

ராஜ்குமார் கடந்த 2019 ஜனவரி 19ம்தேதி முதல் சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 20ம் தேதி ராஜ்குமார் பணிபுரியும் தொழிற்சாலையிலிருந்து, அவரது வீட்டிற்கு வந்த தகவலில், தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக ராஜ்குமார் இறந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனால் கதறியழுத கவுசல்யா வெளிநாட்டில் உயிரிழந்த தனது கணவர் உடலை மீட் டுத் தரக்கோரி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஏப்ரல் 26ம் தேதி முதல் அடுத்தடுத்து மூன்றுமுறை மனுக்கொடுத்து விட்டார்.

இந்நிலையில் கணவரது இறந்த உடலை பெற்றுத் தரக்கோரி 75 நாட்களுக்கு முன்பு மனுகொடுத்து இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லையே எனக்கூறி அழுதபடி, நேற்று பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர்அலுவலகத்திற்கு, தனது ஒன்றரை வயது கைக்குழந்தையுடன் வந்த கவுசல்யா, கணவனின் சாவில் மர்மம் இருப்பதாகவும் இதுகுறித்து ஒன்றிய அரசு சவுதி அரசிடம் விளக்கம் கேட்டு பெற்றுத் தரவேண்டும் எனவும் கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.

Tags : Perambalur Collector , Perambalur: The Perambalur Collector said that action should be taken to bring back the body of the husband who died abroad.
× RELATED பெரம்பலூரில் 26ம் தேதி மாற்றுத்...