புத்துயிர் பெறும் புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனை!: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறது திமுக அரசு..பொதுமக்கள் மகிழ்ச்சி..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் 4 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்து வந்த அரசு தலைமை மருத்துவமனையில் பல்வேறு நவீன வசதிகளுடன் புதுப்பிக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புதுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வந்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தலைமை மருத்துவமனை கடந்த அதிமுக ஆட்சியில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதனால் இரவு நேரங்களில் அவசர சிகிச்சை தேவைப்படும் ஏழை, எளிய மக்கள் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதன் காரணமாக பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த உடன் தேர்தல் வாக்குறுதிபடி புதுக்கோட்டை அரசு  தலைமை மருத்துவமனையை மீண்டும் பழைய இடத்திலேயே செயல்படுத்துவதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அரசு தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, புறநோயாளிகள் பிரிவு என்று அனைத்து பிரிவுகளும் பழையபடியே செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் மருத்துவமனை வளாகத்திலேயே காசநோய் பிரிவு மற்றும் மனநிலை சிகிச்சை பிரிவை செயல்பாட்டில் கொண்டு வருவதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.

Related Stories:

>