முதல் போக சாகுபடிக்கு அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு-விவசாயிகள் மகிழ்ச்சி

உடுமலை : அமராவதி அணையிலிருந்து முதல் போகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.அமராவதி அணை மூலம் திருப்பூர்,கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. நடப்பு ஆண்டில் அமராவதி அணையில் தொடர்ச்சியாக நீர் இருப்பு திருப்திகரமாக இருந்து வருவது விவசாயிகளை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

நேற்று அமராவதி அணையிலிருந்து முதல் போக சாகுபடிக்காக கல்லாபுரம்,ராமகுளம் பழைய பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்பட்டது.இதன்மூலம் 2834 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த வாய்க்கால்கள் மூலம் நேற்று முதல்,வரும் நவம்பர் 24ம் தேதி வரை 346 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று உரிய காலத்தில் தண்ணீர் திறந்து விட்ட அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>