×

தமிழ் மொழியில் குறிப்புகள் பராமரிக்கும் அலுவலர்களுக்கு பரிசு வழங்கல்

சிவகங்கை : சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் தமிழ் மொழியில் வரைவுகள், குறிப்புகள், பராமரிக்கும் அலுவலர்கள் ஊழியர்களுக்கு பரிசுத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை வகித்து பரிசுக்கான காசோலையை வழங்கினார். கலெக்டர் அலுவலக உதவி வருவாய் அலுவலர் பூங்கோதை முதல் பரிசு ரூ.3 ஆயிரம், சிவகங்கை அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலக உதவியாளர் ஆஷாபானு இரண்டாம் பரிசு ரூ.2 ஆயிரம், சிவகங்கை பேரூராட்சிகள் மண்டல உதவி இயக்குநர் அலுவலக உதவியாளர் ஹபீப்ராசா மூன்றாம் பரிசு ரூ.ஆயிரத்திற்கான காசோலையும் பெற்றனர். சார்நிலை அலுவலகங்கள் சார்பாக சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் மரியாள் முதல் பரிசு ரூ.3 ஆயிரம் பெற்றார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் நாகராஜன், அலுவலக கண்காணிப்பு அலுவலர்கள் வெண்ணிலா, சிராஜ்தீன், முனியசாமி, கார்த்திகா கலந்து கொண்டனர்.



Tags : Sivagangai: Drafts, notes, maintenance officers in Tamil on behalf of the Tamil Development Department at the Sivagangai Collector's Office
× RELATED சீர்காழி அருகே குடிநீர் வழங்காததைக்...