
சீர்காழி : சீர்காழி நகர் பகுதியில் விழுப்புரத்தைச் சேர்ந்த சுபாஷ் என்பவர் தலைமையில் ஒரு குழுவினர் பெங்களூரிலிருந்து நாவல் பழங்களை வாங்கிவந்து தள்ளுவண்டி மூலம் விற்பனை செய்து வருகின்றனர். நாவல் பழம் பித்தத்தைத் தணிக்கும். இதயத்தை சீராக இயங்க வைக்கும். மண்ணீரல் நோய்களை குணப்படுத்தும். ரத்த சோகையை தடுக்கும். சிறுநீரகத்தில் ஏற்படும் கற்களை கரைக்கும் ஆகிய மருத்துவ குணம் கொண்டதாலும் சீசனில் மட்டும் கிடைக்கும் என்பதாலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.ஒரு கிலோ நாவல் பழம் ரூ 200க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு ஒரு கிலோ அரை கிலோ கால் கிலோ என்ற கணக்கில் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.