×

வீரமரணம் அடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 போர் வீரர்களின் வாரிசுகளுக்கு தலா ரூ.20 லட்சத்தை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை : இராணுவத்தில் பணியாற்றி வீரமரணம் அடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு போர் வீரர்களின் வாரிசுகளுக்கு தலா 20 இலட்சம் ரூபாயை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்கள்இராணுவத்தில் பணியாற்றி வீரமரணம் அடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு போர் வீரர்களின் வாரிசுதாரர்களை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (13-7-2021) நேரில் அழைத்து ஆறுதல் தெரிவித்ததோடு, கார்கில் போராட்ட வீரர்கள் நிவாரண நிதியிலிருந்து, அவர்களது குடும்பத்தினருக்கு தலா 20 இலட்சம் ரூபாயை வழங்கினார்கள்.
    
மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், சோளம்பட்டி கிராமத்தைச் சார்ந்த மறைந்த படைவீரர் ழி. பாலமுருகன் அவர்களுடைய தாய் திருமதி குருவம்மாள் அவர்களும், கிருஷ்ணகிரி மாவட்டம், இராகிமானப்பள்ளி கிராமத்தைச் சார்ந்த மறைந்த படைவீரர் ழி. சந்தோஷ் அவர்களுடைய தாய் திருமதி சித்ரா அவர்களும், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த மறைந்த படை அலுவலர் ஷி. ஆனந்த் அவர்களுடைய மனைவி திருமதி பிரியங்கா நாயர் அவர்களும், திருப்பத்தூர் மாவட்டம், காக்கங்கரை கிராமத்தைச் சார்ந்த மறைந்த படைவீரர் ஷி. சபரிநாதன் அவர்களுடைய தாய் திருமதி
ஷி. மனோன்மணி அவர்களும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களிடமிருந்து நிவாரண நிதியைப் பெற்றுக் கொண்டார்கள்.   
    
இந்நிகழ்வின்போது, அரசு பொதுத் துறைச் செயலாளர் முனைவர் டி. ஜகந்நாதன், இ.ஆ.ப., மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : Tamil Nadu ,Stalin , முதலமைச்சர்
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து