தலைநகர் டெல்லியில் காலை முதல் பலத்த மழை!: முக்கிய சாலைகளை வியாபித்த மழைநீர்..ஊர்ந்து செல்லும் வாகனத்தால் போக்குவரத்து பாதிப்பு..!!

டெல்லி: தலைநகர் டெல்லியில் அதிகாலை முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 10ம் தேதி பருவமழை தொடங்கியது. இதனால் கடந்த சில நாட்களாகவே வடமாநிலங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக வதைத்து வந்த நிலையில் நேற்று மாலை வெப்பம் குறைந்திருந்தது. தொடர்ந்து, இன்று காலை முதல் டெல்லி முழுவதும் பரவலாக மழை கொட்டி வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்துள்ளது. கடும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் டெல்லி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து அங்குள்ள மாணவர் ஒருவர் தெரிவித்ததாவது, கடந்த சில வாரங்களாகவே டெல்லியில் மிக கடுமையான வெப்பம் நிலவியது. சுட்டெரித்த வெயிலால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் இருந்தனர். காலை முதல் பரவலாக மழை பெய்வதால், அதில் நனைவதற்காக நாங்கள் வெளியே வந்திருக்கிறோம். நகரமே குளிர்ச்சியாக மாறி இருப்பதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று குறிப்பிட்டார். துவாரகா, மதுரா சாலை, சஜகன் சாலை, தவுலா குவான், சரிதா, அஃபர் சாலை, இந்தியா கேட், சன்சர்க் மார்க் விமானநிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளை மழைநீர் வியாபித்துள்ளது. கனமழையால் டெல்லியில் மக்களின் இயல்பு நிலை சற்று பாதிப்படைந்து இருக்கிறது.

Related Stories:

>