நான் அமெரிக்க குடிமகன் தான், ஆனால் இந்தியா என்னுள்ளே மிக ஆழமாக உள்ளது: கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை பேச்சு

வாஷிங்டன்: இந்தியா என்னுள்ளே மிக ஆழமாக உள்ளது: கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். பிபிசி-க்கு அளித்த பேட்டியில் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிரச்சை கூறியதாவது; நான் அமெரிக்க குடிமகன் தான். ஆனால் இந்தியா என்னுள்ளே மிக ஆழமாக உள்ளது. நான் என்பதில் அது மிகப்பெரிய பகுதி ஆகும். சமூக வலைதளங்களில் சுதந்திரம்  இருக்க வேண்டியது மிகவும் அவசியம். எனினும், உலகெங்கிலும் உள்ள பல  நாடுகளில் இவற்றின் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. அந்த நாடுகளில் தகவல்களை வெளியிடுவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு நாட்டிலும், பேச்சுரிமை குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன. உலகிலேயே மிகப்பெரிய அளவில் வரி செலுத்தும் நிறுவனமாக கூகுள் உள்ளது. அது செயல்படும் ஒவ்வொரு நாட்டிலும் உள்ளூர் சட்டங்களை மதித்துச் செயல்படுகிறது. உலகின் மிகப்பெரிய வரி செலுத்தும் நிறுவனங்களில் ஒன்று கூகுள் என்றும் அது செயல்படும் ஒவ்வொரு நாட்டிலும் வரிச் சட்டங்களுக்கு இணங்கி நடக்கிறது எனவும் கூறினார்.

Related Stories: