×

ஆன்டிகுவா செல்ல அனுமதி: மெகுல் சோக்சிக்கு இடைக்கால ஜாமீன்

புதுடெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,500 கோடி மோசடி செய்துவிட்டு குஜராத் வைர வியாபாரிகள் மெகுல் சோக்சியும் அவரது உறவினர் நீரவ் மோடியும் 2018ம் ஆண்டு வெளிநாடு தப்பிச் சென்றனர். லண்டனுக்குச் தப்பிச் சென்ற நீரவ் மோடி, 2019ம் ஆண்டு மார்ச் மாதம் அங்கு கைது செய்யப்பட்டார்.
மெகுல் சோக்சி ஆன்டிகுவா தீவுக்கு தப்பினார். அவர் அந்நாட்டு குடியுரிமை பெற்றவர். இதற்கிடையே சோக்சி, கடந்த மே 23ம் தேதிஆன்டிகுவா தீவிலிருந்து மாயமானார். பின்னர் டொமினிக்கனில் அவர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவரைக் கைது செய்த காவல் துறை, சட்டத்துக்குப் புறம்பாக நாட்டுக்குள் நுழைந்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. அந்த வழக்கு விசாரணை டொமினிக்கன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. விசாரணையில், சோக்சி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க ஆன்டிகுவா செல்ல அனுமதித்து ஜாமீன் தர வேண்டுமெனவும் சோக்சி தரப்பில் வாதாடப்பட்டது. இதை ஏற்ற டொமினிக்கன் நீதிமன்றம் சோக்சிக்கு இடைக்கால ஜாமீன் தந்துள்ளது. விரைவில் அவர் ஆன்டிகுவா அழைத்துச் செல்லப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Antigua ,Miguel Choksi , Mehul Choksi, Interim Bail
× RELATED ரூ.14,000 கோடி மோசடியாளர் மெகுல் சோக்ஸி...