அரசுக்கு தானமாக வழங்கிய 100 கோடி நிலம் அதிமுக முன்னாள் மா.செ. மோசடி: கலெக்டரிடம் பரபரப்பு புகார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சி ஒன்றியம் கொளப்பாக்கத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருக்கு சொந்தமான 85 சென்ட் நிலத்தை, சாலை பணிக்காக அரசுக்கு தானமாக கொடுத்தார். மேலும், இதுதொடர்பாக, படப்பை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தானமாக பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார். ஆனால், அரசுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலத்தை, கடந்த 2007ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக செயலாளராக இருந்த ஈ.வி.பி.பெருமாள்சாமி என்பவர், அரசு அதிகாரிகள் உதவியுடன்  பட்டா மாற்றம் செய்து கொண்டார். மேலும் தற்போது 100 கோடி மதிப்புள்ள இடத்தில் ஈ.வி.பி.பெருமாள்சாமி, திருமண மண்டபம் கட்டி தொழில் நடத்தி வருகிறார்.

இதுகுறித்து நிலத்தை தானம் வழங்கிய ராமகிருஷ்ணனின் மகன் பழனி, பலமுறை அரசு அதிகாரிகளிள், மாவட்ட நிர்வாகத்திம் என பலமுறை புகார் தெரிவித்தார். ஆனால், எவ்வித நடவடிக்கையும் இல்லை. இந்நிையில், தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால், இந்த நில மோசடி விவகாரம் குறித்து ராமகிருஷ்ணன் மகன் பழனி, தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிபில் புகர் அளித்துள்ளார். அதில், அரசு பணிக்காக ஊராட்சி ஒன்றியத்துக்கு தானம் அளித்த நிலத்தை, அரசு அலுவலர்கள் உதவியுடன்  அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் ஈ.வி.பி.பெருமாள் சாமி, பட்டா பெற்று மோசடி செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுதொடர்பாக, காஞ்சிபுரம் கலெக்டரிடம், உரிமையாளர் மகன் பழனி, தனது தந்தை அரசுக்கு தானம் கொடுத்த இடத்தை முறைகேடு செய்து அனுபவித்து வரும் அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் பெருமாள்சாமி மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். அவரது திருமண மண்டபத்தை அரசு பெயருக்கு மாற்றம் செய்ய வேண்டும். தன்னை ஆள் வைத்து மிரட்டும் பெருமாள் சாமி மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று கோரிக்கை மனு அளித்தார். முன்னாள் அதிமுக மாவட்ட செயலாளர் மீது, 1100 கோடி நில மோசடி புகார் அளிக்கப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: