பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சைக்கிள் பேரணி

திருவள்ளூர்:  திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்து சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் ஏ.ஜி.சிதம்பரம் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் என்.ரங்கபாஷ்யம், தளபதி பாஸ்கர், டி.குணாநிதி, ஏகாட்டூர் பி.ஆனந்தன், சி.பி.மோகன்தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வட்டார தலைவர்கள் ஜி.எம்.பழனி, முகுந்தன், பெஞ்சமின், டில்லிபாபு ஆகியோர் வரவேற்றனர். செயல் தலைவர் டாக்டர் கே.ஜெயக்குமார் எம்பி கண்டன உரையாற்றி மாபெரும் சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்து சைக்கிளை ஓட்டிச் சென்றார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் தளபதி மூர்த்தி, ஜெ.டி.அருள்மொழி, டி.வடிவேலு, எஸ்.சரஸ்வதி பி.ஆர்.ரமேஷ், வி.இ.ஜான், எம்.சி.பிரபாகரன், எம்.கே.மணவாளன், ஆ.திவாகர், எஸ்.திவாகர், தர், மதுசூதன ராவ், எம்.ஜெ.ராமன், கே.டி.பிரகாஷ், ஏ.பொன்ராஜ், வி.எஸ்.ரகுராமன், தாஸ், பாடலீஸ்வரன், செல்வகுமார், மோகன்ராஜ், செல்வகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆவடி: பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்து திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சைக்கிள் பேரணி ஆவடியில் நேற்று காலை நடந்தது.  இதில், மாவட்ட தலைவர் லயன் டி.ரமேஷ் தலைமை தாங்கினார். மாநில, மாவட்ட நிர்வாகிகள் எஸ்.பவன்குமார், அருள் அன்பரசு, விக்டரிமோகன், சதா பாஸ்கரன், தரணிபாய், அருணாச்சலம், சாந்தகுமார், விக்டரி ஜெயக்குமார், ராஜன் பர்னபாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆவடி மாநகர தலைவர்கள் இ.யுவராஜ், ஆர்.ராஜசேகர் ஆகியோர் வரவேற்றனர். இந்த பேரணி  ஆவடி, காந்தி சிலையில் தொடங்கி பூந்தமல்லி நெடுஞ்சாலை, புதிய ராணுவ சாலை வழியாக காமராஜர் சிலை வரை வந்தடைந்தது. மேலும், பேரணியில் மாட்டு வண்டியில் பைக், காஸ் சிலிண்டர் ஆகியவற்றிற்கு மாலை அணிவித்து ஊர்வலமாக எடுத்து வந்தனர். அப்போது, பாஜ ஒன்றிய அரசை கண்டித்தும், பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை திரும்ப பெறக்கோரியும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

இதில், மாவட்ட, வட்டார, நகர நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, கபிலன், குபேந்திரன், காமராஜ், விசுவநாதன், குமார், நடராஜன், கோதண்டம், அமித்பாபு, பாபுராம், மணிகண்டன், சுரேஷ்பாபு, இமயவர்மன், ராஜன், சேகர், சம்பத், வெங்கடேசன், சங்கர், நித்தியானந்தம், கண்ணதாசன், செல்வம் சவுந்தர், அபிராமி, ஜெயக்குமார், பொன்ராஜ், தீனாள், பேதுரு, ஜெயசுந்தர், சேதுபதி, அபிஷேக் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>