×

கொரோனா ஊரடங்கு தளர்வால் வேளாங்கண்ணிக்கு படையெடுக்கும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள்

நாகை: கொரோனா  ஊரடங்கு தளர்வால் வேளாங்கண்ணிக்கு பக்தர்கள், சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். உலக புகழ்பெற்ற நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி பேராலயத்திற்கு வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர் இதனால் வேளாங்கண்ணி பேராலயம் வளாகம் மட்டுமின்றி கடற்கரை சாலை மற்றும் கடற்கரையிலும் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டது.
தமிழகத்தில் கொரோ னா பரவல் குறைந்ததால் வழிபாட்டு தலங்களை திறக்க அரசு உத்தரவிட்டது.

இதனால் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டது. இதன் காரணமாக வேளாங்கண்ணி பேராலயத்திற்கு பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. கேரளா, கர்நாடகம், மும்பை உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் சென்னை, திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் தங்களது குடும்பத்தோடு வர துவங்கியுள்ளனர். பக்தர்கள் வருகை அதிகரிப்பதால் பேராலயம், கடற்கரை பகுதிகளில் எங்கு பார்த்தாலும் மனித தலைகளை மட்டுமே காண முடிந்தது. அந்த அளவிற்கு அதிகளவில் மக்கள் வர துவங்கியுள்ளனர்.  அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பேராலயத்தில் தினம்தோறும் வழிபாடு நடத்தப்படுகிறது.

Tags : Corona , Devotees and tourists invade Velankanni due to Corona curfew
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...