விண்வெளி டூருக்கு எவ்வளவு பட்ஜெட்?

சர் ரிச்சர்ட் ப்ரான்சன் ஐரோப்பாவின் மிகப் பெரிய தொழில் அதிபர். இவர் தனது விர்ஜின் கலாட்டிக் என்ற நிறுவனம் மூலம் விண்வெளிக்குச் சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்வதற்கான முயற்சிகளை கடந்த இருபது ஆண்டுகளாக மேற்கொண்டுவருகிறார். அவ்வப்போது பரிசோதனை முயற்சிகள் செய்வதும் பின்னர் பல்வேறு காரணங்களால் தள்ளிப்போவதுமாய் இருந்த திட்டம் ஒருவழியாய் விரைவில் நடக்க இருக்கிறது. ஜூலை பதினொன்றாம் தேதியை நாள் பார்க்காமல் கோள் பார்த்து குறித்திருக்கிறார் ப்ரான்சன். அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் எனப் படும் விண்வெளிப் பயணத்துகான அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ அமைப்பு இந்தப் பயணத்துக்கான அனுமதியை வழங்கிவிட்டது. கடந்த மே மாத இறுதியில் நடந்த கடைசிக்கட்ட ஒத்திகையும் வெற்றிகரமாக முடிந்திருப்பதால் இந்த அனுமதி வழங்கப்

பட்டிருக்கிறது. யுனிட்டி என்ற விண்வெளிக் கப்பலில் ஏறி பூமியிலிருந்து தொண்ணூறு கிலோ மீட்டர் உயரத்துக்குப் போய் விண்வெளியிலிருந்து புவியின் விளிம்பைப் பார்க்கப் போகிறார்கள் பயணிகள். மேலும், அங்கே நிலவும் எடையின்மையையும் உணரப்போகிறார்கள். இதற்காக முந்நூறு சுற்றுலாப் பயணிகள் ஏற்கெனவே பணம் கட்டி தயாராகக் காத்திருக்கிறார்கள். இதில் உலகின் புகழ்பெற்ற பாடகர்கள், ஹாலிவுட் பிரபலங்களும் அடக்கம். இந்தப் பயணத்துக்கான கட்டணம் எவ்வளவு தெரியுமா? ஜஸ்ட் ஒரு கோடியே எண்பத்தைந்து லட்சம் ரூபாய்கள்தான்.

Related Stories:

More