சென்னை முழுவதும் 179 இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம்: போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவு

சென்னை: சென்னை மாநகர காவல் துறையில் 179 இன்ஸ்பெக்டர்களை பணியிடம் மாற்றம் செய்து போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: அடையார் மதுவிலக்கு பிரிவில் இருந்த ஆதவன் கோடம்பாக்கம் சட்டம் ஒழுங்கிற்கும், அபிராமபுரம் சட்டம் ஒழுங்கில் இருந்த சீனிவாசன் ராயப்பேட்டை குற்றப்பிரிவுக்கும், சிந்தாதிரிப்பேட்டை சட்டம் ஒழுங்கில் இருந்த அழகு, அபிராமபுரம் சட்டம் ஒழுங்கிற்கும், கீழ்ப்பாக்கம் சட்டம் ஒழுங்கில் இருந்து ஜெயராமன் அபிராமபுரம் குற்றப்பிரிவுக்கும், ஆயிரம் விளக்கு சட்டம் ஒழுங்கில் இருந்து எம்.சீனிவாசன் மயிலாப்பூர் குற்றப்பிரிவுக்கும், அண்ணாநகர் சட்டம் ஒழுங்கில் இருந்து கண்ணன் வேப்பேரி சட்டம் ஒழுங்கிற்கும், விருகம்பாக்கம் சட்டம் ஒழுங்கில் இருந்த முகமது பரூக்கத்துல்லா பெரியமேடு சட்டம் ஒழுங்கிற்கும்.

 நுங்கம்பாக்கம் சட்டம் ஒழுங்கில் இருந்த சாம் வின்சன்ட் கீழ்ப்பாக்கம் குற்றப்பிரிவுக்கும், விபச்சார தடுப்பு பிரிவு-I ல் இருந்த சண்முகவேலன் அண்ணாசதுக்கம் குற்றப்பிரிவுக்கும், வேப்பேரி சட்டம் ஒழுங்கில் இருந்து ஸ்டாலின் அண்ணாசதுக்கம் சட்டம் ஒழுங்கிற்கும், சைதாப்பேட்டை சட்டம் ஒழுங்கில் இருந்த புகழேந்தி சேத்துப்பட்டு சட்டம் ஒழுங்கிற்கும், தி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்த ராஜேஸ்வரி டி.பி.சத்திரம் சட்டம் ஒழுங்கிற்கும், நுண்ணறிவு பிரிவில் இருந்த சிவமணி சிந்தாதிரிப்பேட்டை சட்டம் ஒழுங்கிற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல,சென்னை மாநகரம் முழுவதும் 179 இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>