×

வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கு இல்லை: நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்ட அறிவிப்பு

சென்னை: வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கு இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்ட அறிவித்துள்ளார். அரசியலில் ஈடுபட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றினேன். மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் பல பதவிகளையும் சார்பு அணிகளையும் உருவாக்கினோம். காலச்சூழலால் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார். ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்துவிட்டு சார்பு அணிகள் எதுவும் இன்றி இனி ரஜினி ரசிகர் நற்பணி மன்றமாக தமது அமைப்பு செயல்படும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ரஜினி மக்கள் மன்றத்தின் செயலாளர்கள், இணை, துணை செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் ரஜினி ரசிகர் நற்பணி மன்றத்தில் செயல்படுவர். இந்த அறிவிப்பின் மூலம் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Tags : rajinikanth
× RELATED விருதுநகர் காங். வேட்பாளர் மாணிக்கம்...