×

குஜராத்தின் 6 மகள்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்பது பெருமை: மத்திய அமைச்சர் அமித்ஷா பெருமிதம்


அகமதாபாத் : குஜராத் காந்திநகர் மக்களவை தொகுதியில் ரூ.448 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா அடிக்கல் நாட்டினார். அகமதாபாத்தில் உள்ள போபாலில் ரூ.4 கோடி மதிப்பிலான நகராட்சி நிர்வாக மையம், பெஜல்பூரில் ரூ.7 கோடி செலவில் கட்டப்பட்ட படிக்கும் வளாகம், சமுதாய கூடம் மற்றும் விருந்து வளாகம் ஆகியவற்றை திரு. அமித்ஷா தொடங்கி வைத்தார்.  

இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ் நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி நடவடிக்கையில் இன்று முக்கியமான நாள். இன்று மொத்தம் ரூ.267 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகள் தொடங்கப்படவுள்ளன.

மேற்கு ரயில்வேயில் ரூ.29 கோடி செலவில் நவீனமயமாக்கல் மற்றும் புதுப்பிப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளன. அகமதாபாத் ரயில் நிலையம் ரூ.17 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தில், ரூ.23,000 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்புகளை விரிவாக்க பிரதமர் திரு நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

கோவிட் 2ம் அலையின் போது ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவியது. குஜராத் உட்பட நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ஆக்ஸிஜன் ஆலைகள் அமைக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு முயற்சிகளை தொடங்கியுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23ம் தேதி, ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகின்றன. இதில் அகமதாபாத்தைச் சேர்ந்த 3 புதல்விகள் உட்பட குஜராத்தைச் சேர்ந்த 6 புதல்விகள் இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்பது பெருமையான விஷயம். குஜராத்தில் கேலோ குஜராத் பிரச்சாரம் தொடங்கியபோது, கபடி, கோ-கோ விளையாடி தங்கப் பதக்கம் வெல்ல முடியுமா என மக்கள் நகைச்சுவையாக கூறினர். ஆனால், இன்று குஜராத்தின் 6 புதல்விகள் ஒலிம்பிக்கில் பங்கேற்க போகின்றனர். அவர்கள் நிச்சயம் தங்கப் பதக்கம் வெல்வர். இவர்களின் போட்டோக்களை ஒவ்வொரு பள்ளியிலும் மாட்ட வேண்டும். அப்போதுதான் அது அதிக குழந்தைகளை ஊக்குவிக்கும்.

இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா பேசினார்.


Tags : Gujarat ,Olympics ,Union Minister ,Amit Shah , அமித்ஷ
× RELATED மீண்டும் பாஜ ஆட்சிக்கு வந்தால் 2024...