×

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,154 பேருக்கு கொரோனா; 724 பேர் உயிரிழப்பு; தொற்றில் இருந்து 39,649 பேர் குணம்

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 724 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், சிகிச்சை பெறுவோர், இறப்பு விகித நிலவரம் குறித்து தினமும் காலை 9 மணியளவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 37,154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* இதன் மூலம், நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,08,74,376 ஆக உயர்ந்தது.

* புதிதாக 724 பேர் உயிரிழந்துள்ளனர்.

* இதன் மூலம் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,08,764 ஆக உயர்ந்துள்ளது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 39,649 பேர் குணமடைந்துள்ளனர்.

* இதன் மூலம், நாட்டில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,00,14,713  ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,50,899 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* நாட்டில் இதுவரை 37,73,52,501 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Tags : Corona ,India , Corona to 37,154 people in India in the last 24 hours; 724 deaths: 39,649 people recovered from the infection and discharged
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...