×

ராகுல் கிண்டல் அமைச்சர்கள் அதிகம் தடுப்பூசி இல்லையே...

புதுடெல்லி: சமீபத்தில் ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு 43 அமைச்சர்கள் புதிதாக பதவியேற்றனர். இதன் மூலம், அமைச்சரவையின் பலம் 77 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘அமைச்சர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, தடுப்பூசிகள் அல்ல,’ என கூறி உள்ளார். அதோடு கொரோனா 3வது அலையை தடுப்பதற்கான தடுப்பூசி சூத்திர வரைபடம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில், ஒன்றிய அரசு இலக்குபடி தகுதி வாய்ந்த 60 சதவீதம் பேருக்கு வரும் டிசம்பர் இறுதிக்குள் தடுப்பூசி போட வேண்டுமெனில் தினமும் 88 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும்.  ஆனால், கடந்த ஒரு வாரமாக தினசரி சராசரி 34 லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், 54 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுவது பின்தங்கியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


Tags : Rahul , Rahul Tease, Ministers, Vaccine`
× RELATED யாரும் ஓட்டு போட கூடாது; ராகுல்...