ஜம்மு விமானப்படை தள டிரோன் தாக்குதலில் பாகிஸ்தான் தொடர்பு: முக்கிய ஆதாரம் சிக்கியது

ஜம்மு: ஜம்முவில் உள்ள இந்திய விமானப்படை தளத்தின் மீது, கடந்த மாதம் 27ம் தேதி தீவிரவாதிகள் டிரோன் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில், உயிரிழப்பு எதுவும் நடக்கவில்லை. இந்தியாவில் முதல் முறையாக நடந்த இந்த டிரோன் தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு துறை விசாரணை நடத்தி வருகிறது. தாக்குதலுக்கு ஆர்டிஎக்ஸ் ரக வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டு  இருப்பதால், இந்த தாக்குதலில் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில், கைப்பற்றப்பட்ட வெடித்த குண்டுகளை ஆய்வு செய்ததில் அதில் ‘பிரஷர் பியூஸ்’ பயன்படுத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, இது பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்தக் கூடியது. எனவே, டிரோன் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ நிபுணர் குழுவுக்கு நெருங்கிய தொடர்பு இருக்கலாம் அல்லது பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ.யின் உதவி பெறும் தீவிரவாத அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ‘பிரஷர் பியூஸ்’ கண்ணிவெடிகளில் பயன்படுத்தப்படும். இது, சாதாரண நேரங்களில் குண்டு வெடிக்காமல் தடுக்கும். ஒரு இடத்தின் மீது மோதினாலோ, அழுத்தம் கொடுத்தாலோ அது வெடிக்கும்.

Related Stories:

>