×

150 ஆண்டுகளுக்குப் பிறகு பூமியை தாக்க வரும் விண்கல்லை திசை திருப்பும் முயற்சியில் சீனா: 20 ராக்கெட்டுகளை வீச திட்டம்

துபாய்:  விண்வெளியில் புதைந்துள்ள அதிசயங்களை விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்டுபிடித்து வருகின்றனர். இதில், 1999்ல்  கண்டுபிடிக்கப்பட்டதுதான் ‘பென்னு’. இது ஒரு சிறுகோள். பூமியில் இருந்து பல கோடி மைல்கள் தொலைவில் உள்ளது. சூரிய மண்டலத்தில் 450 லட்சம் ஆண்டுக்கு முன் இது உருவானதாக‌ கருதப்படுகிறது.  பூமியில் உயிரினங்கள் தோன்றி காலத்தில் இதுவும் தோன்றியுள்ளது. எனவே,  இதில் பல அதிசயங்கள்  அடங்கி இருக்கலாம் என்பதால்,  இதை ஆராய்வதில் விஞ்ஞானிகள் ஆர்வம் காட்டுகின்றனர். செவ்வாய் - வியாழன் கிரகங்களுக்கு நடுவில் உள்ள இது, ‘விண்வெளி குப்பை’ என்றும் அழைக்கப்படுகிறது.

பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் இது, 2175 மற்றும் 2199ம் ஆண்டுகளுக்கு இடையே பூமியை தாக்கும் அபாயம் உள்ளது.. இதன் எடை 8.5 கோடி டன்னாகும். இது,  பூமியை நோக்கி வருவதை திசை திருப்பும் முயற்சியில் சீனா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காக, சீன விஞ்ஞானிகள் 20க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை பென்னுவை நோக்கி அனுப்ப‌ திட்டமிட்டுள்ளனர். இவை ஒவ்வொன்றும் 992 டன் எடை கொண்டவை. இவற்றின் உந்துதலால் பென்னுவின் திசை மாறக் கூடும் என நம்பப்படுகிறது.

தங்கம், பிளாட்டினம்
குவியல்: பூமியில் இருப்பதை விட பல மடங்கு தங்கம், பிளாட்டினம் வளங்கள், பென்னு சிறுகோளின் மேற்பரப்பில் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

ஹிரோஷிமா மீது  வீசப்பட்ட அணுகுண்டை விட மோசம்
பூமியின் மீது ‘பென்னு’ மோதினால், அதன் ஆற்றல் 1,200 மெகா ட‌ன்களாக வெளிப்படும். இது, ஜப்பானின் ஹிரோஷிமா மீது வீசப்பட்ட அணுகுண்டின் ஆற்றலை விட 80 ஆயிரம் மடங்கு அதிகமாக இருக்கும் என கருதப்படுகிறது. இதனால், பெரும் சேதம் ஏற்படும்.

Tags : China ,Earth , Earth, Meteor, China, Rocket, Project
× RELATED சீனாவில் பிரம்மாண்ட கார்...