×

புதுச்சேரியில் 16ம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா தொற்று 2வது அலை காரணமாக கடந்த மார்ச் 22ம் தேதி பள்ளிகள் மூடப்பட்டது. தொடர்ந்து, அனைத்து கல்லூரிகளும் மூடப்பட்டது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இருப்பினும், தொற்று பாதிப்பு அதிகமாக இருந்ததால் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கடந்த ஜூன் மாதத்தில் இருந்து கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என கடந்த 2 நாட்களுக்கு முன்பு கவர்னர் தமிழிசை தெரிவித்திருந்தார். இதனால் பள்ளிகள் விரைவில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முதல்வர் ரங்கசாமி கூறுகையில், புதுச்சேரியில் வரும் 16ம் தேதியிலிருந்து 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும். அதேபோல், 16ம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும்’ என தெரிவித்தார்.

Tags : Pondicherry , Schools and colleges open on the 16th in Pondicherry
× RELATED வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய பகுதிகளில்...