×

கேரளாவில் கொரோனா முழு ஊரடங்கு: குமரி-கேரள செக்போஸ்ட்களில் கண்காணிப்பு தீவிரம்

களியக்காவிளை: ேகரளாவில் கொரோனா கட்டுக்குள் வராததால் அங்கு முழு ஊரடங்கு நீடித்த வண்ணம் உள்ளது. இதனால் இரு மாநில செக்போஸ்ட்களிலும் போலீசார் தீவிர சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் தாக்கம் வெகுவாக குறைந்து வருகிறது. மாநிலத்தின் மொத்த பாதிப்பு 3000 என்ற நிலைக்கு வந்துள்ளது. இதனால் அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. இதனால் கடைகள் திறப்பு, பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழகம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. மக்களிடமும் கொரோனா பீதி குறைந்துள்ளது.

ஆனால் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா 2வது அலை பாதிப்பு குறைந்த பாடில்லை. அரசு பல கட்ட நடவடிக்கைகளை எடுத்தும் தொற்று பாதிப்பு கட்டுக்குள் வரவில்லை. இதனால் அரசு கடந்த சில வாரங்களாக சனி, ஞாயிறு தினங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது. இருப்பினும் கொரோனா குறைந்த பாடில்லை. இதனால் அரசு, மக்கள் கட்டுப்பாடுகளை கண்டிப்பாக கடை பிடிக்க வேண்டும். விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்எதிரொலியாக குமரி- கேரள எல்லையான களியக்காவிளை, கோழிவிளை, பளுகல், செங்கவிளை, கண்ணநாகம் உள்பட பல்வேறு செக்போஸ்ட்டுகளில் ேசாதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

போலீசார் குமரி வழியாக கேரள செல்லும் கார், லாரி, பைக் உள்பட அனைத்து வாகனங்களும் உரிய ஆவணங்களை சோதித்து அனுப்புகின்றனர். அத்தியாவசிய தேவை, மருத்துவ தேவை, இறப்பு உள்ளிட்ட காரணங்களுக்கு மட்டுமே அனுமதிக்கின்றனர். இதேபோல் கேரள செக்போஸ்ட்டுகளான இஞ்சிவிளை, ஊரம்பு, காரக்கோணம், வெள்ளறடை உள்ளிட்ட செக்போஸ்ட்டுகளில் கேரள போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். தொற்று குறையாததால் கேரளா போலீசார் கடும் கெடுபிடிகளை காட்டுகின்றனர்.  வாகனங்களை கடும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கின்றனர். சுகாதார பணியாளர்கள் மூலம் சளி, ரத்தம் பரிசோதனையும் மேற்ெகாள்ளப்படுகிறது.

இதனிடையே நேற்று, இன்றும் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடின. அத்தியாவசிய தேவைக்கு செல்வோர் மட்டுமே அனுமதிக்கபட்டனர்.  இதர பணிக்கு செல்வோர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். ஏற்கனவே இரு மாநிலத்திற்கும் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது. மொத்தத்தில் கேரளாவில் கொரோனா கட்டுக்குள் வந்தால்தான் இரு மாநிலத்திற்கும் கிடையே சகஜ நிலை திரும்பும் என்பதில் ஐயமில்லை.



Tags : Kerala ,Kumari- , Corona full curfew in Kerala: Surveillance intensity at Kumari-Kerala checkposts
× RELATED மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை...